2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

SLT-MOBITEL இன் ஊழியர்களுக்காக பொழுது போக்கு நிலையம்

S.Sekar   / 2022 ஒக்டோபர் 07 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழியர்களை ஊக்குவித்து, ஈடுபாட்டைப் பேணும் நோக்குடன், SLT-MOBITEL, தனது பன்நோக்கு பொழுது போக்கு நிலையத்தை, கட்டான, பொத்தோடே பகுதியில் அண்மையில் நிறுவியுள்ளது.

SLT-MOBITEL இன் உரிமையாண்மையின் கீழான பகுதியில் இந்த பொழுது போக்கு நிலையம் அமைந்துள்ளது. இரண்டு ஏக்கர் பகுதியில் அதிகாரிகளுக்கான தங்குமிடப்பகுதி மற்றும் 40 பேர்ச் பகுதியில் பரந்த விளையாட்டு மைதானம் ஆகிய இரு பகுதிகளை இந்த நிலையம் கொண்டுள்ளது. 1.75 ஏக்கர் பகுதியில் சிற்றூழியர்களுக்கான தங்குமிட வசதிகளையும் கொண்டுள்ளது. முன்னர் இந்தப் பகுதி, SLT அதிகாரிகளின் தங்குமிடமாக காணப்பட்டதுடன், தொற்றுப் பரவல் காலப்பகுதியில் ஊழியர்களுக்கான கொவிட் சிகிச்சை நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையத்தின் அறிமுக நிகழ்வில் குழும தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ, குழும பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன, பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க (SLT), சந்திக விதாரென – பிரதம நிறைவேற்று அதிகாரி (மொபிடெல்) மற்றும் SLT-MOBITEL இன் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தரம் வாய்ந்த பொழுது போக்கு அம்சங்கள், அனுபவங்கள் மற்றும் வசதிகளை பெற்றுக் கொடுத்து, சமூகமாக வளர்ச்சியை எய்தும் நோக்கில் SLT-MOBITEL, பன்நோக்கு பொழுது போக்கு நிலையத்தை ஊழியர்களுக்கு பரந்தளவு சேவைகளை உள்ளடக்கியதாக, எதிர்காலத்தில் மேலும் மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளது.

இந்த நிலையத்தை நிறுவியிருந்ததன் பிரதான நோக்கம், SLT-MOBITEL ஊழியர்களுக்கு பரந்தளவு வசதிகளை வழங்கி, தமது நலன்புரிச் செயற்பாடுகளை விஸ்தரிப்பதுடன், ஒரு சூழலில் வெளியக பயிற்சிகளை சௌகரியமாக முன்னெடுக்க வசதியளிப்பதாக அமைந்துள்ளது. இந்த நிலையம் வெளியக நிகழ்ச்சிகளையும் முன்னெடுக்கும். சொத்து கொள்ளளவை முழுமையாக எய்துவதை அடிப்படையாகக் கொண்ட SLT-MOBITEL இன் நோக்கத்தின் பிரகாரம் இந்த நிலையம் அமைந்திருக்கும். பயிற்சி தொழிற்பாட்டு செலவீனங்களைக் குறைத்து இல்லாமல் செய்வதனூடாக நீண்ட கால செலவுக்குறைப்பை ஏற்படுத்துவதுடன், வெளியக வளாகம் மற்றும் நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதனூடாக மேலதிக வருமானமீட்டுவதையும் இலக்காகக் கொண்டுள்ளது. பாரிய காணிப் பகுதியினூடாக, தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநருக்கு, சூழலுக்கு நட்பான செயன்முறைகளினூடாக நிலைபேறாண்மையை ஊக்குவிக்கக்கூடியதாக இருக்கும்.

நிலையத்துக்கான எதிர்கால வசதிகளில் விடுமுறை பங்களா, சகல வசதிகளும் படைத்த ஊழியர்களுக்கான பொழுது போக்கு நிலையம், SLT பயிற்சி நிலையத்தின் நிகழ்வுகளை முன்னெடுக்கும் ஆற்றல் மற்றும் உள்ளக மற்றும் வெளியக விளையாட்டு போட்டித் தொடர்களுக்கான களம் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும்.

மொத்தத்தில், இந்த நிலையத்தினூடாக ஊழியர்களின் நலன்புரி, ஊக்குவிப்பு மற்றும் விருந்தினர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த அனுபவங்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X