2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

SLT-MOBITEL ரெயின்போ பேஜஸ் புதிய பதிப்பு வெளியீடு

Freelancer   / 2023 ஜூன் 30 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் வியாபாரத்தை முன்னெடுப்பதற்கு மிகவும் வலிமையான சந்தைப்படுத்தல் சாதனமாக அறியப்படும் SLT-MOBITEL இன் தேசிய வியாபார தொலைபேசி இலக்கக் கோவையின் 2023/24 ரெயின்போ பேஜஸ், நுண், சிறு மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களின் உள்நாட்டு தேடல்களுக்கு வசதியளிக்கின்றது. நாடு முழுவதையும் சேர்ந்த நிறுவனங்களுக்கு டிஜிட்டல் யுகத்தில் போட்டிகரத் தன்மையை வழங்குவதாக அமைந்துள்ளது.

பாவனையாளர்கள் மற்றும் வியாபாரங்களை உள்நாட்டு மற்றும் உலகின் புகழ்பெற்ற உற்பத்தியாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இணைப்பதில் நம்பிக்கையை வென்ற வியாபார தொலைபேசி இலக்கக் கோவையாக ரெயின்போ பேஜஸ் வியாபார தொலைபேசி இலக்கக் கோவை அமைந்துள்ளது.

இன்று, ரெயின்போ பேஜஸ் வியாபார தொலைபேசி இலக்கக் கோவை, இலங்கையின் ஏக தேசிய வியாபார தொலைபேசி இலக்கக்கோவை எனும் நிலையை தன்னகத்தே கொண்டுள்ளது. 6000 க்கும் அதிகமான வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் 170000 க்கும் அதிகமான சிறு விளம்பரங்கள் போன்றன தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், நாட்டின் சகல பொருளாதாரப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த தொலைபேசி இலக்கக் கோவை அமைந்துள்ளதுடன், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் விவரங்களும் அடங்கியுள்ளன.

கடந்த காலங்களில், நுண், சிறிய, நடுத்தரளவு முதல் பாரியளவு வியாபாரங்கள் என அனைத்தும், ரெயின்போ பேஜஸ் வியாபார தொலைபேசி இலக்கக் கோவையில் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், தமது வாடிக்கையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட தகவல்களையும் பரிமாறப் பயன்படுத்துகின்றன.

இந்த தொலைபேசி இலக்கக் கோவை டிஜிட்டல் கோவையாக அமைந்திருப்பதுடன், அச்சு வெளியீடாகவும் கிடைக்கின்றது. உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், தயாரிப்பாளர்கள், சேவைத் துறைகள் மற்றும் பாரியளவு வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய வசதிகளை வழங்குகின்றது.

முக்கியமாக, தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு, மெருகேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் தொலைபேசி இலக்கக்கோவையான ‘rainbowpages.lk’ தொடர்ந்தும் அச்சு வெளியீட்டைக் கொண்டுள்ளது. இணையத்தளத்துக்கு தினசரி 10,000 பார்வையாளர்களை பதிவு செய்த வண்ணமுள்ளது. அதிகளவு போட்டிகரத்தன்மை வாய்ந்த சந்தையில் வியாபாரங்களுக்கு சிறந்த வளர்ச்சியை எய்துவதற்கு, ரெயின்போ பேஜஸ் உடன் விளம்பரப்படுத்திக் கொள்வது சிறப்பானதாகும்.

ரெயின்போ வியாபார தொலைபேசி இலக்கக் கோவை என்பது சகல அளவுகளையும் சேர்ந்த வியாபாரங்களுக்கு தமது பாவனையாளர்களை வினைத்திறனான வகையில் சென்றடைவதற்கு அவசியமான தேடலின் வலிமையினூடாக இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள உதவியாக அமைந்துள்ளது. உள்நாட்டு வியாபாரங்களுடன் நுகர்வோருக்கு தொடர்புகளை ஏற்படுத்தி ஈடுபாட்டைக் கொண்டிருப்பதற்கு உதவும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வியாபாரங்களின் தகவல்களைக் கொண்ட கட்டமைப்பாக இந்த தொலைபேசி இலக்கக் கோவை அமைந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட காட்சியமைப்புகளுடன், அவர்களால் பரந்தளவு வாடிக்கையாளர்களை சென்றடையக்கூடியதாக இருக்கும் என்பதுடன், புதிய வாடிக்கையாளர்களை கவரக்கூடிய வாய்ப்புகளையும் அதிகரித்துக் கொள்ள முடியும்.

அரச நிறுவனங்கள் தமக்கு அவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விலைமனுக்கோரல்களை மேற்கொள்ளும் போது, Rainbow Pages Directory இல் பதிவு செய்யப்பட்டுள்ள சேவை வழங்குநர்களை பயன்படுத்துமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், தேசிய வியாபாரக் கோவையில் பட்டியலிடப்பட்டள்ள அமைப்புகளுக்கு, அரசாங்கத்தின் விலைமனுக்கோரல்களுக்கு விண்ணப்பிக்கும் தகைமையும் கிடைக்கின்றது.

அச்சுக் கோவைக்கு மேலதிகமாக, தகவல்களை நவீன டிஜிட்டல் கோவைக் கட்டமைப்புகளான மொபைலில் பார்வையிடக்கூடிய வகையில் செம்மைப்படுத்தப்பட்ட இணையத்தளமான rainbowpages.lk, மொபைல் App, கோவை CD மற்றும் 24 மணி நேர அழைப்பு நிலைய சேவை (SLT 1212 மற்றும் மொபைல் 444) போன்றவற்றினூடாக பெற்றுக் கொள்ள முடியும்.

SLT Digital Services (Pvt) Limited (SLT-DIGITAL) என்பது SLT-MOBITEL இன் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் துணை நிறுவனமாகத் திகழ்வதுடன், ரெயின்போ பேஜஸின் பெருமைக்குரிய வெளியீட்டாளராகவும் திகழ்கின்றது. மேலும், நிறுவனம் டிஜிட்டல் சந்தைப்படுத்தல், இணையத்தள வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு, நிகழ்வு முகாமைத்துவம், செயற்படுத்தல் மற்றும் வர்த்தக நாம சேவைகள் போன்றவற்றில் நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது. மென்பொருள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் தீர்வுகள் மற்றும் உட்கட்டமைப்பு மற்றும் சேவைகள் ஒதுக்கீடுகள் போன்றவற்றிலும் நிறுவனம் தன்னை ஈடுபடுத்தியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X