2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

Saegis Campus இடமிருந்து 75% வரை புலமைப்பரிசில்

Freelancer   / 2023 செப்டெம்பர் 15 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உயர் கல்விச் சேவைகளை வழங்கும் Saegis Campus, தனது பத்து வருட பூர்த்தியை இவ்வாண்டு கொண்டாடும் நிலையில், க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு 75% வரை புலமைப்பரிசில்களை வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஆகக்குறைந்தது 3 பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களுக்கு இந்த கற்கைகளை தொடர்வதற்கு இணைய முடியும். அவர்கள் பெற்றுக் கொண்ட சித்திகளின் அடிப்படையில் புலமைப்பரிசில் வழங்கப்படும். மூன்று பாடங்களிலும் ‘A’ சித்தியைப் பெற்றவர்களுக்கு 75% புலமைப்பரிசிலும், ‘B’ சித்தி பெற்றவர்களுக்கு 45%, ‘C’ மற்றும் ‘S’ சித்தி பெற்றவர்களுக்கு முறையே 30% மற்றும் 15% புலமைப்பரிசில் வழங்கப்படும். கற்கைநெறியின் முதல் வருடத்துக்கு இந்தப் புலமைப்பரிசில் பொருத்தமானதாக அமைந்திருக்கும் என்பதுடன், மாணவரின் கல்விசார் தேர்ச்சியின் அடிப்படையில் அடுத்து வரும் ஆண்டுகளுக்கும் நீடிக்கப்படும்.

தெரிவு செய்யக்கூடிய கற்கைளில் Bachelor of Business Management (Hons) சுற்றுலாத்துறையில் அல்லது விருந்தோம்பல் துறையில் விசேடத்துவம் பெறுவது, சந்தைப்படுத்தல், மனித வளங்கள் முகாமைத்துவம் அல்லது கணக்கீடு மற்றும் நிதியியல், Bachelor of Business Administration (BBA), முதல் Bachelor of Science Honours (BSc (Hons)) உடன் கணனி விஞ்ஞானம், மென்பொருள் பொறியியல் மற்றும் IT ஆகியவற்றில் விசேடத்துவம், மற்றும் Bachelor of Information Technology (BIT) போன்றன அடங்கியுள்ளன.

மாணவர்களுக்கு நெகிழ்ச்சியான பயலல் முறையை தெரிவு செய்து கொள்ள முடியும். முதல் இரண்டு வருடங்களுக்கு வாரநாள் வகுப்புகளுக்கு தம்மை பதிவு செய்து கொள்ள முடியும், அதன் பின்னர் எஞ்சியிருக்கும் இரண்டு வருடங்களுக்கு வார இறுதி வகுப்புகளுக்கு மாற்றிக் கொள்ள முடியும். நுகேகொட நகரில் அமைந்துள்ள Saegis Campus, நவீன வசதிகள் படைத்த பயிலல் அம்சங்களை வழங்குவதுடன், மேலதிக ஆங்கில மொழி வகுப்புகள், பாதுகாப்பான தங்குமிட வசதிகள், தொழில்நிலை வழிகாட்டல்கள் மற்றும் பரந்தளவு பிரத்தியேக விருத்தி நிகழ்ச்சிகள் போன்றவற்றை வழங்குகின்றது.

அதிகளவு போட்டிகரத் தன்மை வாய்ந்த தொழிற்துறைகளினுள் உத்தரவாதத்துடனான தொழில் பயிலல் வாய்ப்புகளையும் Saegis Campus வழங்குகின்றது. இதனூடாக தொழில் நிலையில் நேரடி அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடிவதுடன், கற்கை நிறைவடைந்ததும் தமது தொழில் வாய்ப்பைப் பெறும் வாய்ப்பை மேம்படுத்திக் கொள்ளவும். விரிவுரையாளர்களும் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களாக திகழ்வதுடன், பலர் டாக்டர் பட்டம் பெற்றவர்களாக உள்ளனர். தமது பாடம் தொடர்பில் ஆழமான மற்றும் போதியளவு கற்பித்தல் அனுபவத்தையும் கொண்டுள்ளனர்

பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினால் அனுமதியளிக்கப்பட்ட பட்ட பாடநெறிகளை Saegis Campus வெற்றிகரமாக வழங்குகின்றது. அரசாங்கம் அறிமுகம் செய்த மாணவர்களுக்கு வட்டியில்லாத கடன் திட்டங்களை பயன்படுத்தும் வசதியையும் வழங்குகின்றது. கல்வியகத்தினால் Pearson HNDகள், மற்றும் top-up பட்டங்கள் மற்றும் பிரித்தானியாவின் Canterbury Christ Church University உடன் இணைந்து பட்டப்பின்படிப்பு கற்கைகளும் வழங்கப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .