2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

UTE மூலம் புதிய கட்டபிலர் 428 F Backhoe loader இலங்கையில் அறிமுகம்

A.P.Mathan   / 2013 மே 08 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


சர்வதேச புகழ் பெற்ற கட்டபிலர் வர்த்தக நாமத்தை இலங்கையில் பிரதிநிதித்துவப்படுத்தும் UTE (United Tractors) நிறுவனமானது புதிய கட்டபிலர் 428 F Backhoe loader இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிமுக நிகழ்வு அண்மையில் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றது. இப் புதிய இயந்திரத்தின் அறிமுகம் குறித்து UTE நிறுவனத்தின் தலைவர் ரியாட் இஸ்மையில் கருத்து தெரிவிக்கையில்இ 'CAT Backhoe இயந்திரமானது கட்டுமான இயந்திரங்களின் வரிசையில் பல்திறன் கொண்ட உற்பத்தியாக காணப்படுவதுடன், அடிப்படை கட்டுமானம் அல்லது உள்கட்டமைப்பு தேவைகளுக்கு இணையாக செயற்படுகிறது. செயல்பாட்டினை எளிதாக்கி அதிகூடிய செயல்திறனை உறுதிப்படுத்தி வாடிக்கையாளர்களின் உற்பத்தி திறனை அதிகரிப்பது இப்புதிய F series backhoe இயந்திரத்தின் சிறப்பம்சமாகும்' என்றார். 
 
இப்புதிய வகை கட்டபிலர் 428 F backhoe loader இயந்திரமானது பொதுவான பயன்பாடு அல்லது பன்முக பயன்பாடுகளின் போது, செயல்திறனை அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ட்ரக் போன்ற வாகனங்களில் இலகுவான முறையில் ஏற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது. கீழ் ஹுட் லைன் மூலம் பக்கெட்டின் மேற்பகுதியிலிருந்து தெளிவான தோற்றத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதன் வியாபார குறியீட்டுக்கு அமைவாக கெபினிலுள்ள சிறப்பான ஏர்கோநொமிக்ஸ் பகோ லோடர் செயற்படுத்துநருக்கு இலகுவாக செயற்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் கட்டுப்படுத்திகள் அமைந்துள்ளன. மேலும், CAT எயார் சஸ்பென்சன் கொண்ட இருக்கைகள், இயக்குபவருக்கு உயர் சௌகரியத்தையும், இலகுவாக இயந்திரத்தை இயக்குவதற்கும் வழிகோலுகிறது. இதன் மூலம் உயர் செயற்திறன் உறுதி செய்யப்படுகிறது. 
 
428 F இலுள்ள புதிய சிறப்பமிசங்களில், அகழ்வியந்திர (excavator) பாணியில் அமைந்த பக்ஹோ மூலம், ட்ரக்களுக்கு மிகவும் நெருக்கமாக சென்று சரக்கை ஏற்றல் செயற்பாடுகளை செய்யக்கூடிய வசதி படைத்ததாகவும், சுவர்கள் போன்ற கடினமான தளங்களையும் தகர்க்கக்கூடிய திறன் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த இயந்திரம் மிருதுவானதும் மற்றும் சிக்கனமானதுமான செயற்பாடு, கொள்ளளவு உணர்திறன், மூடிய மையத்தை கொண்ட ஹைட்ரோலிக் கட்டமைப்பு போன்றன வலு மற்றும் தேவையான செயற்பாட்டுக்கான ஒழுங்கமைப்பு போன்றவற்றை சீராக வழங்குகிறது. ஒழுங்மைப்பை பகிரும் ஹைட்ரோலிக் வால்வுகளின் மூலம் சீரான எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்வதுடன், பல்செயற்பாடுகளை மேற்கொள்கையில் அவசியமான எண்ணெய் விநியோகத்தையும் உறுதி செய்கிறது.
 
தொடர்ந்து இந்த புதிய செயற்பாடு குறித்து ரியாட் இஸ்மையில் கருத்து தெரிவிக்கையில், '428 F பக்ஹோ லோடர்களின் அறிமுகத்தை தொடர்ந்து, நாம் காட்சிக்காக வைத்திருந்த இயந்திரம் உடனடியாக கொள்வனவு செய்யப்பட்டது. இதன் மூலம் எம்மீதும், எமது தயாரிப்புகளின் மீதும் வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. எமது நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவசியமான நிகரற்ற தீர்வுகளை வழங்கும் ஒரு முன்னணி நிறுவனம் என்பதையிட்டு நாம் பெருமையடைகிறோம். வாடிக்கையாளர்களின் உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் அமைந்ததும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பங்களிப்பை வழங்கும் வகையிலும் எமது தயாரிப்புகள் அமைந்துள்ளமை எமக்கு பெருமை சேர்க்கின்றன' என்றார்.
 
2013ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் தமது ஓடர்களை பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.250,000 பெறுமதியான விலைக்கழிவை பெறுவதுடன், கொள்வனவு செய்த முதல் வருடத்தில் அவசியமான ஃபில்டர்கள் இயந்திரத்துடன் இலவசமாக வழங்கப்படும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .