Editorial / 2019 மே 08 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
29.04.2019
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், LOLC ஹோல்டிங்ஸ், ஓவர்சீஸ் ரியால்டி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 162 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.
30.04.2019
சிலோன் டொபாக்கோ கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 197 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, சிலோன் டொபாக்கோ கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு கொமர்ஷல் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.
01.05.2019
சர்வதேச தொழிலாளர் தின பொது, வங்கி, வர்த்தக விடுமுறை காரணமாக கொழும்பு பங்குப் பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறவில்லை.
02.05.2019
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ், LOLC ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 148 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.
03.05.2019
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டிஸ்டிலரீஸ் மற்றும் டில்மா சிலோன் டீ கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 111 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு மட்டுப்படுத்தப்பட்டளவு பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு சொஃவ்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ், செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், வலிபல் பவர் எரத்னா பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.
வாரத்தில் அ.ப.வி.சு 0.03சதவீத உயர்வையும் S&P SL20 0.66சதவீத உயர்வையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 155 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.
1 hours ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026