2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

பொலிஸ், பொதுமக்களுக்கிடையிலான கூட்டம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 10 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

பொலிஸ் மற்றும் பொதுமக்களுக்கிடையிலான கலந்துரையாடல் கூட்டமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஐயாத்துரை மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமரசிறி சேனாரத்தின கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

இதன்போது அவர்,

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் கப்பம் பெற்ற பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரவு நேரத்தில் வீடுகளில் வசிப்பவர்கள் விழிப்பாக இருக்கவேண்டும். அண்மைக் காலத்தில் களவு கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது.

இவ்விடயம் குறித்து நாம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

போதைப்பொருள் பாவனை பெருமளவு வவுனியாவில் குறைந்துள்ளது. ஆனாலும் நாங்கள் இவ்விடயத்தில் தீவிர கவனம் செலுத்தியுள்ளோம் என குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .