Editorial / 2018 ஜூன் 30 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட இரணைப்பாலை பகுதியில், விடுதலைப் புலிகளால் வெடிமருந்துகள் புதைத்து வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இடம்ஒன்றில், முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் தோல்வியில் நிறைவடைந்தது.
சென்அன்ரனிஸ் விளையாட்டு மைதானத்தில் ஒருபகுதியில் விடுதலைப்புலிகளின் வெடிமருந்துகள் புதைத்துவைத்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, நேற்று காலை 11.30 மணியளவில், அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
சுமார் ஒன்றரை மணிநேரம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும், எதுவித பொருள்களும் கிடைக்காத நிலையில், பகல் 1 மணியளவில் அகழ்வுப் பணி நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .