Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
மாங்குளம் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டாலும், அதற்கான அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் இதனால் நோயாளர்கள் முதல் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் வரை, பெரும் அவலங்களை எதிர்கொள்வதாக மாங்குளம்
பிரதேச பொது அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மையப் பகுதியான மாங்குளத்தில் அமைந்துள்ள மாங்குளம் வைத்தியசாலை, ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளபோதும் அதற்கான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலை தொடர்ந்து காணப்படுகின்றது.
குறிப்பாக, ஏ-9 வீதியில் அமைந்துள்ள ஒரு வைத்தியசாலையாகவும் வவுனியாவில் இருந்து 45 கிலோ மீற்றர் தொலைவிலும் கிளிநொச்சியிலிருந்து 29 கிலோ மீற்றர் தொலைவிலும் அதேபோல் முல்லைத்தீவில் 48 கிலோ மீற்றர் தொலைவிலும் மல்லாவியில் இருந்து 20 கிலோ மீற்றர் தொலைவிலும் இவ்வைத்தியசாலை அமைந்துள்ளது.
ஏ-9 வீதியிலும் ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதி, மாங்குளம் - மல்லாவி வீதி உட்பட இந்தப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படுகின்ற விபத்துகளில் காயமடைபவர்கள் உடனடியாக மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்ற நிலையில், இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் வவுனியா, கிளிநொச்சி போன்ற தூர இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக, மாங்குளம் வைத்தியசாலையில் குடிநீர் வசதியின்மை, அவசர சிகிச்சைப்பிரிவு இன்மை, இரத்த வங்கியின்மை, போதிய வைத்தியர் வசதியின்மை எனப் பல்வேறுபட்ட குறைபாடுகள் காணப்படுவதுடன் அனுமதிக்கப்படும் நோயாளர்களை ஏனைய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு ஏற்றவகையில் ஒரேயோர் அம்பியுலன்ஸ் மாத்திரமே காணப்படுகின்றமையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். R
19 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago