Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 17 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் பகுதியில் தனிமையில் வீட்டில் இருந்த வயோதிப தம்பதிகள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு அவர்களின் நகைகள் பணங்களை கொள்ளையடித்த சம்பவம் ஒன்று நேற்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலுத் தெரியவருகையில்,
தேவிபுரம் மஞ்சல் பாலத்திற்கு அருகில் வீடுஒன்றில் வயோதிப தம்பதிகள் வாழ்ந்து வந்துள்ளார்கள்.
இவர்களின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெண்மணி மீது சரமாரியான தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் வயோதிப தந்தை மீது வாள்வெட்டு தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.
இதன் போது பெண்மணியின் கழுத்தில் மஞ்சல் கயிற்றில் இருந்த முக்காப்பவுண் தாலியினை கொள்ளையர்கள் அறுத்துள்ளதுடன் வயோதிபர் மீதும் சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
இதையடுத்து, வயோதிப தம்பதிகள் கிராம அமைப்புக்களின் உதவியுடன் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
20 minute ago
27 minute ago