Freelancer / 2022 ஜூலை 07 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு நகர் பகுதியில் வைத்து அதிநவீன ஸ்கேனர் இயந்திரத்துடன் தென்பகுதியினை சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
இவர்கள் கடந்த திங்கட்கிழமை கொழும்பில் இருந்து புதுக்குடியிருப்பிற்கு வந்துள்ளார்கள். பின் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நோக்கி பயணித்த போது முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களிடம் இருந்த அதிநவீன ஸ்கேனர் இயந்திரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த ஸ்கேனர் மாணிக்கக்கல், தங்கம் என்பனவற்றை அடையாளம் காட்டும் என புலன் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், இவர்கள் எங்கு சென்றார்கள் என்ன செய்தார்கள் தொடர்பான தகவல்களை முல்லைத்தீவு பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் ராகமை மற்றும் அவிசாவளை பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (R)
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026