2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அதிகாரிகள் வராமையால் சோபையிழந்தது கூட்டம்

George   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பூநகரி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ளாததன் காரணமாக கூட்டத்தினை நடாத்துவதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது.

வரவேண்டிய அதிகாரிகளுக்குப் பதிலாக வருகை தந்திருந்தவர்களும் கூட்டத்தில் பதிலளிக்க முடியாதிருந்ததன் காரணமாக இணைத்தலைமைகள், சங்கடமான நிலைமையை எதிர்கொண்டனர்.

'இனிவரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் கலந்துகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், தவிர்க்க முடியாமல் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாவிட்டால் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிகாரிகள் பதிலளிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும், இது தொடர்பாக பிரதேச செயலாளர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை விடுக்க வேண்டும்' என இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .