2025 மே 19, திங்கட்கிழமை

அரச திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது

Editorial   / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியாவில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்துவதற்கு, அரச திணைக்களங்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லையெனத் தெரிவித்த தொற்றா நோய் தடுப்பு பொறுப்பதிகாரி வைத்தியர் எஸ். லவன், இதற்கமைய சம்பந்தப்பட்ட அரச திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக நாளை (18) வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறினார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில், இன்று (17) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், சுகாதாரம் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், வவுனியாவில், டிசெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில், 171 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனரெனவும் இந்த அதிகரிப்பானது இந்த மாதம் 300 பேர் வரை எதிர்பார்க்க கூடியதாக இருக்குமெனவும் கூறினார்.

டெங்கு நுளம்பு ஒழிப்புக்கு பொதுமக்கள் தம்மாலான பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்ற போதிலும், அரச திணைக்களங்கள அதிகாரிகளின் ஒத்துழைப்பு மிகவும் குறைவாகவே உள்ளதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார்.

இவ்விடயமம் தொடர்பாக, ஒவ்வொரு திணைக்களங்களில் இருந்தும் பிரதிநிதிகளைக் கொண்டு பிரேரிக்குமாறு கேட்ட போதிலும், இதுவரை மூன்று திணைக்களங்கள் மாத்திரமே விவரங்களை அனுப்பியுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

3 கூட்டங்கள் நடத்தப்பட்டும், ஏதுவான செயற்பாட்டை அரச திணைக்களங்கள் எடுக்காமையால், புதன்கிழமையில் ​(18) இருந்து, சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், வைத்தியர் எஸ். லவன் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X