Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
நீண்ட காலமாக பாதிப்படைந்த நிலையில் காணப்பட்ட நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆத்திக்குழி குளக்கட்டு பிரதான வீதி கொங்கிரீட் வீதியாக அமைக்கும் பணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் நிதி ஒதுக்கீட்டில், இன்று காலை 10 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் நகர சபையின் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி ஆகியோர் இணைந்து, குறித்த வீதி அமைக்கும் பணியை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 550 மீற்றர் நீளம் கொண்ட ஆத்திக்குழி குளக்கட்டு பிரதான வீதி, கொங்கிரீட் வீதியாக அமைக்கும் ஆரம்ப பணிகள் இடம்பெற்றன
இதன்போது, நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளர் எஸ்.லூர்துநாயகம் (புவனம்), நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள்,டெலோ இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளர் ஜீ.பிறேம், நாடாளுமன்ற உறுப்பினரின் மாவட்ட இணைப்பாளர் ப.மதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, உமநகரி, அச்சங்குளம் வீதிகளும் தலா 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொங்கிரீட் வீதியாக அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பித்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago