Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஜூன் 16 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பர்ட்
மன்னார் நகர மத்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்றைய தினம் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவு முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணையை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 300 ரூபாய்க்கான மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், மன்னார் பிரதேச செயலாளரால் அப்பகுதியில் கடமையாற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடமைக்கு அழைக்கப்பட்டு அவர்களால் எரிபொருள் விநியோகம் மேற்பார்வை செய்யப்படுவதுடன் பொலிஸாரும், இராணுவத்தினரும் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் மன்னாரில் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்று வருகின்ற நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய் பெற்று வருகின்றனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
4 hours ago
5 hours ago