Freelancer / 2022 மே 30 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியுள்ளது
கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு வருடங்கள் பக்தர்கள் ஆலயத்துக்கு வருகின்றமை தடை செய்யப்பட்டு ஆலய நிவர்வாகத்தினர் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆலய சம்பிரதாய கிரிகைகளை நடாத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை கட்டுப்பாடுகள் அற்ற ஆலய கிரிகைகள் சிறப்புற ஆரம்பமாகியுள்ளன.
அந்த வகையில் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வாக இடம்பெறும் பாக்குத்தெண்டல் உற்சவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றது.
முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து, வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுடன் நீண்ட தொடர்பை பேணி வந்த குடியானவர்களுக்கு மரவு வழியாக அறிவிப்பதற்காக அவர்களது வீடுகளுக்கு சென்று பாக்குத்தெண்டல் இடம்பெற்றது.
இன்று பாக்கு தெண்டலுடன் ஆரம்பமான இவ்வாண்டுக்கான (2022) வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தில் திங்கட்கிழமை தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் அதனை தொடர்ந்து திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகி அம்மனின் பொங்கல் உற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)
16 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
46 minute ago