2025 ஜூலை 09, புதன்கிழமை

ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

George   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

ஆனையிறவு, குறிஞ்சாதீவு உப்பளங்களை தனியார் மயமாக்குவதற்கு  எதிராக மேற்கொள்ளப்படவிருந்த ஆர்ப்பாட்டம் பிற்போடப்பட்டுள்ளது

கிளிநொச்சி, ஆனையிறவு மற்றும் குறிஞ்சாதீவு உப்பளங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வியாழக்கிழமை (01) காலை ஆனையிறவு உப்பளத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

இருந்த போதும், நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக குறித்த எதிர்ப்பு நடவடிக்கை தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்களின் சுற்றயல் கிராம அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன. காற்றுடன் கூடிய மழை காரணமாக குறித்த ஆர்ப்பாட்டத்தை தாங்கள் பிற்போட்டுள்ளதாகவும் விரைவில் பிரிதொரு தினத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் அது தொடர்பில் அனைவருக்கும் அறிவிக்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .