Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 மார்ச் 21 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 32 இந்திய மீனவர்கள் , ஐந்து விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
தமிழக மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்று நெடுந்தீவு கடற்பரப்பில் மூன்று படகுகளுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 மீனவர்கள் மற்றும் மன்னார் கடற்பரப்பில் இரண்டு விசைப்படகுகளுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கும் ,மன்னார் கடற்படை முகாமிற்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 32 பேரும் 5 படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மன்னார் மற்றும் யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை (21) ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிதர்ஷன் வினோத்
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago