2025 ஜூலை 09, புதன்கிழமை

இராணுவத்திடமுள்ள காணியை விடுவிக்க விரைவில் நடவடிக்கை

Gavitha   / 2016 நவம்பர் 21 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ் .என் .நிபோஜன் 

இராணுவத்தினரின் வசத்திலுள்ள, கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கச் சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் குறித்த பாடசாலை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சிக்கு திங்கட்கிழமை விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், கிளி.மகா வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் விசேட  கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போதே இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, யுத்த பாதிப்புக்கு உள்ளாகிய மேற்படி பாடசாலைக்குத் தேவையான வளங்களை பெற்றுத்தருமாறும் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த கோரிக்கைகளை வெகு விரைவில்  நிறைவேற்றுவதற்கான  நடவடிக்கைகளை எடுப்பதாக  எதிர்கட்சித்தலைவர்,  பாடசாலை நிர்வாகத்தினருக்கு உறுதியளித்துள்ளார். 

இக் கலந்துரையாடலில்  எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்திச் சங்கத்தினர்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .