2026 மே 04, திங்கட்கிழமை

இளைஞரணிக்கு புதிய தலைவர் தெரிவு

Editorial   / 2019 ஏப்ரல் 20 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞரணி தலைவராக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை சேயோன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இளைஞரணியின் செயலாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுப்பிரமணியம் சுரேன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகர சபை மண்டபத்தில் இன்று (20) நடைபெற்ற இளைஞரணி மாநாட்டின் போது இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு, கிழக்கு பகுதிக்கான இளைஞர் அணி மாநாடும் நிர்வாகத் தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, வவுனியா நகர மண்டபத்தை சூழ பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .