2025 மே 22, வியாழக்கிழமை

’உவர்நீர்த் தடுப்பணை அமைக்கவும்’

Editorial   / 2019 ஜூன் 07 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - மண்டைக்கல்லாறு ஆற்றுக்கான உவர்நீர்த் தடுப்பணையை அமைத்து விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மண்டைக்கல்லாறு பாலத்துக்கான உவர் நீர்த்தடுப்பணை அமைக்கப்படாமையால் கடற்பெருக்கு காலங்களில் மண்டைக்கல்லாற்றில் உவர்நீர்பெருக்கெடுத்து முடக்கனாற்றினூடாக வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் ஆகிய பகுதிகள்குள் உவர்நீர் உட்புகுந்து வருடாந்தம் இப்பகுதிகளில் உவர்ப்பரம்பல் அதிகரித்து வருகின்றது.

கடல் நீர் உட்புகுதலை தடுப்பதற்கும் ஆனைவிழுந்தான், வன்னேரிக்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேறும் மழை நீரை வெளியேற்றுவதற்குமான கதவுகளுடன் கூடிய தடுப்பணைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இவ்வாறு உவர் நீர்த்தடுப்பணைகள் இன்மையால் கடற்பெருக்கு காலங்களில் உவர் நீர் பெருக்கெடுத்து வன்னேரிக்குளம், குஞ்சுக்குளம், ஆனைவிழுந்தான் ஆகிய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதுடன், தற்போது அக்கராயன்குளம் பகுதிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, அக்கராயன்குளத்தின் கீழான ஸ்கந்தபுரம் மணியங்குளம் ஆகிய பகுதிகளிலும் குடிநீர் கிணறுகள் உவர்நீர்க்கிணறுகளாக மாறி வருவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைவிட விளைநிலங்கள் பலவும் உவர்நிலங்களாக மாறி வருகின்றதுடன், விளைச்சல்கள் பாதிப்படைவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X