2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு

Freelancer   / 2022 ஜூன் 20 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சியில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகளை
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்தவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த ஊடகவியலாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவதற்கு கடந்த வாரம் குறித்த பாடசாலையின் அபிவிருத்திக் குழு தீர்மானம் மேற்கொண்டு, முறைப்பாடு செய்யப்பட்டு கடந்த வெள்ளிக் கிழமை அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் அதிபரால்  மேற்கொள்ளப்பட்ட ஊழல், முறைகேடுகளை சமூக வலைத்தளம் மூலம் வெளிப்படுத்தியதோடு, உரிய திணைக்களம் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில் தனது ஊழல், முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் பொதுவெளியில்
வெளிவருவதனை தடுக்கும் நோக்கில் பாடசாலை அதிபரால் பொலிஸாரிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

எனினும், ஆதாரங்களாக ஆவணங்களுடன் முறைகேடுகளை  வெளிப்படுத்தியதன் காரணமாக தம்மால் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது எனத் தெரிவித்த கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யுமாறு பாடசாலை அபிவிருத்திக் குழுவினருக்கு கூறியுள்ளனர்.. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .