Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2016 நவம்பர் 16 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எலிக் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட ஒருவா், கிளிநொச்சியில் மரணமடைந்துள்ளதாக மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 13ஆம் திகதி, வயல் விதைப்பில் ஈடுப்பட்ட பின்னா், காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, கிளிநொச்சி மருதநரைச் சோ்ந்த விவசாயி, எலிக் காச்சால் காரணமாக செவ்வாய்கிழமை மரணமடைந்துள்ளாா்.
எனவே, இது தொடா்பில் பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் குறிப்பாக விவசாயிகளை மிகவும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட சுகாதார துறையின் கேட்டுக்கொண்டுள்ளனா்.
“எலிகளின் சிறுநீர் ஊடாகவே வெளிச்சூழலுக்கு வரும் பக்டீரியா, வயல்களில் காணப்படும் சிறு கிடங்குகளில் நிற்கும் நீரிலும், வயல்களில் தேங்கியுள்ள நீர்ப்பரப்புகளிலும் தங்கிவிடுகிறது.
ஏற்கெனவே தோலில் இருக்கும் காயங்கள் மற்றும் வயலில் வேலைசெய்யும்போது ஏற்படக்கூடிய சிறு தோல் சிராய்ப்புக் காயங்கள், புண்கள், தோல் உராய்வுகள் என்பன வழியாக மனித உடலுக்குள் நுழைகிறது.
வயல்களுக்கு அண்மையில் நீர்தேங்கியுள்ள குளம், குட்டைகளில் குளிக்கும்போது அந்த நீர்நிலைகளில் காணப்படும் பக்டீரியாவானது, கண்களில் உள்ள மென்சவ்வுகள் ஊடாக மனித உடலுக்குள் நுழைகிறது.
வயல்களில் இறங்கி வேலைசெய்யும் விவசாயிகளுக்கு இந்த நோய் தொற்றும் அபாயம் அதிகம் உள்ளதுடன், வயல்களில் இறங்கும் எவருக்கும் இந்த நோய் தொற்றும் அபாயம் காணப்படுகின்றது” என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
எலிக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள்
காய்ச்சல் உடம்பு, உளைச்சல், அல்லது உடல் நோதல், தலையிடி, உடல் களைப்பு, அல்லது உடல் அலுப்பு ஆகியவை பிரதான அறிகுறிகளாகும்.
கண் சிவத்தல், சத்தி (வாந்தி), கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீர் வெளியேறுவது குறைதல்ஆகியவையும் நோய் அறிகுறிகளாக இருக்கலாம்.
ஆனால், சில நோயாளிகளுக்கு எந்த ஒரு குணம் குறியும் தென்படாது எனவே உடனடியாக வைத்தியசாலையை நாடி உரிய சிகிசை பெறவேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
8 hours ago