Freelancer / 2024 பெப்ரவரி 23 , பி.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
றொசேரியன் லெம்பேட்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய 2024 ம் வருடத்திற்கான திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கச்சதீவு பயணமாகி உள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் (23) 40 படகுகளில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமன்னார் துறைமுகத்தின் ஊடாக கச்சதீவு ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.
இன்று மலை வழிபாடுகளுடன் ஆரம்பமாகும் திருவிழாவானது நாளை சனிக்கிழமை காலையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவு பங்கின் பங்கு தந்தையர்களின் தலைமையில் விசேட திருப்பலிகள் ஒப்புக் கொடுக்க புனித அந்தோனியார் திருவிழா சிறப்பாக நடைபெறும் .
மேலும் இந்த வருட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு இந்தியாவிலிருந்து பக்தர்கள் எவரும் வருகை தரவில்லை என கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. R









30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025