Editorial / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு வவுனிக்குளத்தின் மேலதிக அபிவிருத்திகளுக்குரிய நிதிகளை துறைசார் அமைச்சுகளிடமிருந்து பெற்று, குளத்தின் கீழான கட்டுமானங்களை புனரமைத்து தருமாறு விவசாய அமைப்புகள் கோரியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான வவுனிக்குளம் கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் புனமைக்கப்பட்டதுடன், 24 அடி நீர் கொள்ளவைக் கொண்டதாக காணப்பட்ட கொள்ளளவு மேலும் இரண்டு அடியால் உயர்த்தப்பட்டு குளம் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குளம் புனரமைக்கப்பட்டபோதும், குளத்தன் கீழ் உள்ள நீர் விநியோக வாய்க்கால்கள் விவசாய வீதிகள் கழிவு வாய்க்கால்கள் என்பன புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.
இதனால் பயிர்ச்செய்கை காலங்களில் விவசாயிகள் விளை பொருட்களையும் விவசாய உள்ளீடுகளை கொண்டு செல்வதிலும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த குளத்தின் கீழ் உள்ள நீர்ப்பாசன வீதிகள் நீர் விநியோக வாய்க்கால்கள் என்பவற்றை புனரமைப்பதற்கான நிதிகளை உரிய திணைக்களங்கள் அமைச்சுக்களிடமிருந்து பெற்று மேற்படி புனரமைப்பு பணிகளை முன்னெடுத்து தருமாறு விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்படி குளத்தின் கீழ் 6,060 ஏக்கர் நெற்செய்கை காணிகளும் 1,200 ஏக்கர் வரையான ஏற்று நீர்ப்பாசனத்திட்ட காணிகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
15 minute ago
30 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
30 minute ago
38 minute ago