2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கடும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Gavitha   / 2016 நவம்பர் 21 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக பலபகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

பொன்னகர், முறிகண்டி, செல்வபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் மக்களின் வீடுகளுக்குள் சென்றுள்ளது.

அக்கராயன் - முறிகண்டி வீதி வெள்ளம் நிறைந்து காணப்பட்டமையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான முறிகண்டி, செல்வபுரம், வசந்தநகர் ஆகிய கிராமங்களுக்கான வடிகால் வசதிகள் உரியமுறையில் செய்யப்படாமையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .