2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கண்டன கூட்டம்

George   / 2016 நவம்பர் 21 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி அக்கராயனில் திங்கட்கிழமை (21) நடைபெறவிருந்த சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக நடைபெறவிருந்த கண்டனப் பேரணி, தொடரும் பெரும் மழையினால் கண்டனக் கூட்டமாக நடைபெற்றது.

அக்கராயன் மத்தி பொது நோக்கு மண்டபத்தில் அக்கராயன் கிராமத் தலைவர் இ.சபாரஞ்சிதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல் கிராம மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

அக்கராயனில் மீள்குடியேற்றத்தின் பின்னர,; தொடர்ச்சியாக அக்கராயன் ஆறு, சுபாஸ் குடியிருப்பு உட்பட வயல் நிலங்களில் தொடரும் மணல் அகழ்வினைக் கண்டித்து இன்று கண்டனப் பேரணி நடாத்துவதென முடிவெடுக்கப்பட்ட போதிலும் தொடரும் பெரும் மழையினால் கண்டனப் பேரணி கண்டனக் கூட்டமாக நடைபெற்றதுடன், இக்கண்டனக் கூட்டத்தில் அக்கராயனில் தொடரும் மணல் அகழ்வு தொடர்பாக ஜனாதிபதிக்கு மனு அனுப்பிவைப்பதென தீர்மானிக்கப்பட்டு மக்கள் மனுக்களில் கையொப்பமிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .