2025 ஜூலை 09, புதன்கிழமை

கழிவுகளை அகற்றுவதில் அசமந்தம்

George   / 2017 ஜனவரி 06 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு நகரத்துக்கு அண்மையில் உள்ள சுற்றுலாமையமான கடற்கரை  மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகள் குப்பை, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிறைந்து காணப்படுவதால், பொழுது போக்குக்கான அங்கு ஒன்று கூடும் பொதுமக்கள், பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

கழிவுகளை சீராக அகற்றுவதில் கரைதுரைப்பற்று பிரதேச சபையினரின் அசமந்தப்போக்கு காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞச்சாட்டுகின்றனர்.

“சம்மந்தப்பட்ட தரப்பினர், இதனை கருத்தில் கொண்டு குறித்த பிரதேசத்தை நாளாந்தம் சுத்தமாகவும் அழகாகவும் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

“பிரதேச சபையினர், தமவு வருமானத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனரே தவிர, இவ்வாறான இடங்கள் மற்றும் நகர் பகுதிகளை அழகுபடுத்தி பேணுவதில் அக்கறை காட்டுவதில்லை” என பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .