Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி அக்கராயனில் தொடர்கின்ற கால்நடைக் களவுகளை கட்டுப்படுத்துங்களென பொலிஸாரிடம், அக்கராயன் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த இருமாதங்களில் பதினைந்துக்கு மேற்பட்ட கால்நடைகள் அக்கராயன் பிரதேசத்தில் இருந்து களவாடப்பட்ட நிலையில், ஒன்றுதிரண்ட பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள், அக்கராயன் கிராம அலுவலர் ப.சபாரட்ணம் தலைமையில் பொலிஸாருடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.
மீள்குடியேற்றத்தின் பின்னர் வாழ்வாதாரத்தினைத் தீர்மானிக்கின்ற சக்தியாக கால்நடை வளர்ப்பு காணப்படுகின்றது. வாழ்வாதார உதவிகளாகவும் கால்நடைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் கால்நடைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு பல குடும்பங்கள் வாழ்ந்துவரும் நிலையில், கால்நடைகள் களவாடப்பட்டு வருவதாகவும் சில கால்நடைகள் கொல்லப்பட்டு இறைச்சிகள் மட்டும் எடுத்துச் செல்லப்பட்டுவதாகவும், குறித்த இந்நடவடிக்கைகளைப் பொலிஸார் தடுத்து நிறுத்த வேண்டுமென, கால்நடை வளர்ப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதன் போது கருத்துத் தெரிவித்த அக்கராயன் பொலிஸ் நிலைய அதிகாரிகள், வவுனியா போன்ற இடங்களிலிருந்து வாகனங்களில் வருபவர்கள் உள்ளூரில் இருப்பவர்களின் உதவியுடன் கால்நடைகளைக் கொன்று இறைச்சிகளை மட்டும் எடுத்துச் செல்கின்றனர். இவை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. குற்றவாளிகளை நெருங்கி வருகின்றோம். விரைவில் கைது செய்வோம். கால்நடை வளர்ப்பாளர்களும் மிகுந்த விழிப்புடன் கால்நடைகளை பாதுகாத்து கொள்ளுங்கள். கிராமங்களுக்குள் வருகின்ற வாகனங்கள் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
28 minute ago
29 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
29 minute ago
31 minute ago
1 hours ago