Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி திருநகர் வடக்குப் பகுதியில், பிணக்கிலுள்ள காணியொன்றுக்கு உரிமை கோரும் ஒருவர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரை தாக்க முற்பட்டதுடன் இராணுவப் புலனாய்வாளர்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயிர்அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி திருநகர் வடக்குப் பகுதியிலுள்ள மூன்று குடியிருப்புக் காணிகளை ஒரே காணியாக்கி, விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவர் குடியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், தற்போது இக்காணிகளை பல்வேறு தரப்புகள் உரிமை கோரி வருகின்றன.
இவ்வாறு பிணக்கிலுள்ள காணி தொடர்பாக கரைச்சிப் பிரதேச செயலகம் ஆராய்ந்து வருவதுடன், காணிக்குள் எந்தத் தரப்பும் அபிவிருத்தி செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த காணியில் ஏற்கெனவே இருந்த கட்டடத்தின் ஒரு பகுதியை, கடந்த வாரம் இரவோடிரவாக நபரொருவர் திருத்தம் செய்ததையடுத்து, கிராம அபிவிருத்திச் சங்கத்தால் கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளருக்கு தகவல் வழங்கப்பட்டது. இததையடுத்து குறித்த கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரை குறித்த நபர் தாக்க முற்பட்டதுடன், தான் இராணுவப் புலவானய்வாளர்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருப்பதாகவும் அவர்கள் மூலம் நடவடிக்கை எடுப்பதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டுக்கமைய, குறித்த காணிக்குள் எந்த அபிவிருத்தியும் செய்ய வேண்டாம் எனப் பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த காணிக்குள் உள்ள வீட்டை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் நேற்று முன்தினம் (21) சேதப்படுத்தியதாக, அத்துமீறி காணியை கையப்படுத்த முயற்சிக்கும் நபர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அது போலியான முறைப்பாடு எனக் கண்டறிந்து முறைப்பாட்டாளரை கடும் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இதற்குப் பிறகும் தொடர்ந்து குறித்த நபர் தன்னை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
33 minute ago
1 hours ago
4 hours ago