Freelancer / 2022 ஜூலை 07 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சியில் உணவு பாதுகாப்பு நெருக்கடி தொடர்பான ஐ.நா உயரதிகாரிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் 6ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
உணவு பாதுகாப்பு நெருக்கடி தொடர்பாக நாடளாவிய ரீதியில் மாவட்ட அடிப்படையில் நேரடி கள ஆய்வு செய்யும் ஐ.நா உயரதிகாரிகள் கிளிநொச்சிக்கு வருகை தந்து கிளிநொச்சி கமநல சேவைகள் நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கு கொண்டனர்.
இக்கலந்துரையாடலின்போது கிளிநொச்சி மாவட்டத்தின் உணவு பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஆராயப்பட்டதோடு விவசாய, விலங்கு வேளாண்மை உற்பத்திகளின் தற்போதைய நிலை மற்றும் உற்பத்திகளுக்கான பிரதானமான தடைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சிறுபோக அறுவடையினை மேற்கொள்வதில் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள், அறுவடை மேற்கொள்ள முடியாத போது ஏற்படக் கூடிய உணவு நெருக்கடி தொடர்பாகவும் விவசாய பிரதிநிதிகளினால் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. (R)
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026