2025 மே 05, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் வாய்க்காலுக்குள் வீழ்ந்து குழந்தை பலி

Freelancer   / 2022 ஜூன் 04 , பி.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - மருதநகர் பகுதியில் நிசாந்தன் சபீசன் என்ற ஒன்றரை வயது குழந்தை நீர்ப்பாசன வாய்க்காலுக்குள் வீழ்ந்து இறந்துள்ளான்.

இந்த சம்பவம் இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த குழந்தையின் வீட்டிற்கு அருகில்  இரணைமடு நீர்ப்பாசன வாய்க்கால் காணப்படுகிறது. தற்போது அவ்வாய்க்கால் சிறுபோக நெற்செய்கைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. 

இதனால் அதிகளவு நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்குள் வீழந்த குழந்தை வீழந்த இடத்திலிருந்து
இரண்டு கிலோ மீற்றர்  தூரம் வரை நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். 

பின்னர் குறித்த குழந்தை உயிரிழந்த நிலையில் அயலவர்களினால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்கள். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X