Freelancer / 2022 ஜூன் 10 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு. தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - திருவையாறு பகுதியில், தவறவிடப்பட்ட 4 லட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசியினை உரியவரிடம் ஒப்படைத்த புதுமுறிப்பு இளைஞனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஒருவர், கிளிநொச்சியில் உள்ள கிராமிய பாடசாலை ஒன்றுக்கும், முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கும் உதவி செய்யும் பொருட்டு கிளிநொச்சிக்கு விஜயம் செய்த போது அவரது 4 இலட்சம் ரூபாய் பெறுமதியாக கையடக்க தொலைபேசியினை தவறவிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த தொலைபேசியினை கண்டெடுத்த கிளிநொச்சி - புதுமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை தவக்குமார் என்ற இளைஞன், அதனை உரிமையாளரிடம் கையளித்துள்ளார். இளைஞனின் இச்செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (R)
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026