2025 மே 05, திங்கட்கிழமை

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான அறிவிப்பு

Freelancer   / 2022 ஜூலை 17 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து வெளி மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்கு  செல்லும் மக்கள் தற்போது ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடி காரணமாக செல்ல முடியாத நிலைமை ஏற்படின் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையுடன் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மாதாந்த அல்லது ஏனைய சிகிச்சைகளுக்கு செல்லும் பொது மக்கள் போக்குவரத்து நெருக்கடி காரணமாக மாவட்டத்திற்கு வெளியே செல்ல முடியாத  நிலையில் இருப்பின் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையுடன் தொடர்பு கொள்கின்றபோது மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க முடியுமாயின் அவ்வாறனவர்களுக்கு மாவட்டத்திலேயே சிகிச்சை அளிக்கவும், ஏனையவர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் தாம் நடவடிக்கைகள்
மேற்கொண்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே மாவட்டத்திற்கு வெளியே சிகிச்சைக்காக செல்கின்ற பொது மக்கள் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்நோக்கின் மாவட்ட வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X