2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

கிளி. விவசாயிகளுக்கு இலவச உர விநியோகம்

Niroshini   / 2021 நவம்பர் 04 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் கீழ், 2021/2021 காலபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான இலவச சேதனப் பசளை வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில், சுமார் 71 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில், சுமார் 21 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், இவ்வாண்டு  நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், விவசாயிகளுக்கான சேதன உரத்தை வழங்கும் செயற்பாடுகள், கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தில் பெரும்பாக உத்தியோகத்தர் ந. சுந்தரமூர்த்தியால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது   

கமக்கார அமைப்புகள் ரீதியாக குறித்த உர விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X