Freelancer / 2022 ஜூன் 30 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் உள்ள பொதுச் சந்தைக்கு பின் பகுதியில் இருந்து, 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மூக்கன் சஜீவன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தடவியல் பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மேலதிக விடயங்களை தெரிவிக்க முடியுமென பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கடந்த சனிக்கிழமை (25) காலை வீட்டிலிருந்து சென்று காணாமல் போன நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026