2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கோர விபத்தில் சிக்கிய குடும்பம் : 4 வயதுச் சிறுவன் பலி

Freelancer   / 2025 ஜூலை 10 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஆர்.லெம்பேட்

மன்னார் - நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிகுளம் பகுதியில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி  படுகாயமடைந்த நிலையில், 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

சம்பவத்தில் தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் இன்று (10) மாலை நானாட்டான் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, நானாட்டான் பிரதான வீதி வழியாக மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பிக்கப் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

எனினும், பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயது சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தான். 

மேலும், தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகிய மூவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்த முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .