2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கொக்குத்தொடுவாயில் நிலக்கடலை சேமிப்பு களஞ்சியம்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக தரிசனம் நிறுவனத்தின் 2.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடமாகாண விவசாய அமைச்சால் முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் அமைக்கப்பட்ட நிலக்கடலை சேமிப்புக் களுஞ்சியம் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், செவ்வாய்க்கிழமை (13) திறந்து வைத்தார்.

இலங்கையில் நிலக்கடலை உற்பத்தியில் மொனராகலை மாவட்டத்துக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் முல்லைத்தீவு மாவட்டமே உள்ளது. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 5,000 மெற்றிக்தொன் நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலும் பெரும்பங்கு முல்லைத்தீவின் எல்லைப்புற கிராமங்களான கொக்குத்தொடுவாய், கொக்குளாய், கருநாட்டுக்கேணி போன்ற இடங்களிலேயே விளைவிக்கப்படுகிறது. இதைக் கருத்திற்கொண்டே, கொக்குத்தொடுவாயில் வடமாகாண விவசாய அமைச்சின்யுnஉhழச் ஏற்பாட்டில் நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் ம.அன்ரனி ஜெயநாதன், வடமாகாணசபை உறுப்பினர்கள் து.ரவிகரன், க.சிவநேசன், வ.கமலேஸ்வரன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண விவசாயப்பணிப்பாளர் சி.சிவகுமார் உட்பட பலர் கலந்தகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X