2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் 7, 076 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 7, 076 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக மாவட்ட செயலகப்புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம், விபத்துக்கள், தொழில் வாய்ப்பு தேடி வெளிநாடுகளுக்கு செல்லுதல், குடும்பப்பிணக்குகள், குடும்பப் பிரிவுகள் என பல்வேறு காரணங்களால் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை, பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் 7, 076 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன.
 
அதாவது நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் 20 வயதுக்கு உட்பட்ட 34 குடும்பங்களும் 30 வயதுக்கு உட்பட்ட 526 குடும்பங்களும் 40 வயதுக்கு உட்பட்ட 1, 124 குடும்பங்களும் 50 வயதுக்கு உட்பட்ட 1,335 குடும்பங்களும் 60 வயதுக்கு உட்பட்ட 1,507 குடும்பங்களும் 60 வயதுக்கு மேற்பட்ட 2,550 குடும்பங்களும் என பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன.

இவ்வாறான பெண் தலைமைத்துவ குடும்பங்களில் பெரும்பாலனவை தமது அன்றாட வாழ்வாதார செயற்பாடுகளுக்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X