Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
நந்திக்கடல் நீரேரியில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையை கண்காணிக்கச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கடற்தொழில் அமைப்பினை சேர்ந்த 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி தொழில் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்துக்கு கடற்தொழிலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதற்கமைய கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் மற்றும் வட்டுவாகல், நீராவிப்பிட்டி, கிச்சிராபுரம் மீனவ சங்கங்களை சேர்ந்தவர்கள் நந்திகடலில் மேற்கு பகுதியான வற்றாப்பளை தொடக்கம் கேப்பாபுலவுக்கு இடைப்பட்ட செம்மன் மோட்டைப்பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளை பிடிப்பதற்காக சென்றபோது அங்கிருந்த மீனவர்களுக்கும் சென்ற அதிகாரிகள் மற்றும் கடற்தொழிலாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
செம்மன் மோட்டை பகுதி மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளை பார்வையிடவிடாமல் மறுத்துள்ளதுடன் ஒன்று திரண்டு அங்கு சென்ற மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மீது பொல்லுகளால் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இச்சம்பவத்தினை தொடர்ந்து மேலதிகமாக சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு வரவழைக்கப்பட்டு நிலமையினை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள். இதன்போது மீனவ சங்கங்களை சேர்ந்த ஏழு அங்கத்தவர்கள் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சம்பவம் குறித்து முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago