2025 மே 05, திங்கட்கிழமை

சுகாதாரப் பணிமனையினரின் அறிவிப்பால் மக்கள் விசனம்

Freelancer   / 2022 ஜூலை 14 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

“குழந்தைகளுக்கான  தடுப்பூசி  ஏற்றுவதற்கு முல்லைத்தீவு மல்லாவி சுகாதார பணிமனைக்கு குழந்தைகளை கொண்டு வாருங்கள்” என சுகாதாரப் பணிமனையினர் அறிவித்திருப்பது தொடர்பாக துணுக்காய் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

துணுக்காயின் அம்பலப்பெருமாள் குளம் கிராமத்தில் இருந்து 23 கிலோ மீற்றர் தூரத்தில் மல்லாவி சுகாதார பணிமனை உள்ளது. புத்துவெட்டுவானில் இருந்து 18 கிலோமீற்றர் தூரத்தில் மல்லாவி உள்ளது. 

அம்பலப்பெருமாள் குளம், கோட்டைக்கட்டிய குளம், தென்னியங்குளம், புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, ஐயன்கன்குளம் ஆகிய கிராமங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து சேவைகள் நடைபெறுவதில்லை. 

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக பெற்றோர்கள் குழந்தைகளை மல்லாவிக்கு கொண்டு செல்ல முடியாது. 

ஆகவே மல்லாவி சுகாதார பணிமனையினர் வழமை போன்று கிராமங்களுக்கு வருகை தந்து தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி துணுக்காயின் போக்குவரத்து வசதிகளற்ற கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X