Freelancer / 2022 ஜூன் 28 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா - வேப்பங்குளம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,000 லீற்றர் அளவிலான 15 பெரல் டீசல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில், வவுனியா பொலிஸ் விசேட பிரிவினர், நெளுக்குளம் பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் இணைந்து இரும்பகம் ஒன்றில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது 15 பெரல்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த டீசலினை மீட்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (R)
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026