Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 07 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - வன்னேரிக்குளம் சுற்றுலா மையம் தற்போது சுற்றுலா பயணிகளை வரவேற்க காத்திருக்கிறது .
கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களாக இருந்த சு.தயாபரன், நா.சபாநாயகம் ஆகியோர் எடுத்த முயற்சி காரணமாக வன்னேரிக்குளம் சுற்றுலா மையம் 65 இலட்சத்திற்கு மேற்பட்ட நிதியில் உருவாக்கப்பட்டது.
குறித்த சுற்றுலா மையத்தில் முக்கியமான அடிப்படை வசதிகள் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. குடிநீர், மின்சாரம், மலசலகூட வசதிகள் உருவாக்கப்பட வேண்டும்.
கரைச்சி பிரதேச சபையினால் வன்னேரிக்குளம் சுற்றுலா மையம் கடந்த வாரம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 15 பணியாளர்கள் இரண்டு நாட்கள் இரவு பகலாக தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு இருந்தனர்.
வன்னேரிகுளம் வீதி புனரமைக்கப்பட்டு உள்ளதன் காரணமாக செயலிழந்த சுற்றுலா மைய செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கும் பொருட்டு கரைச்சி பிரதேச சபையினால் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பல தேசங்களில் இருந்து பறவைகளும் இயற்கையின் அழகு குளமும் அதனோடு இணைந்த அருவிகளும் இணைந்த வன்னேரிக்குளம் சுற்றுலா மையம் சுற்றுலா பயணிகளை வரவேற்க காத்திருக்கிறது . (R)
8 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
3 hours ago