2026 பெப்ரவரி 20, வெள்ளிக்கிழமை

சுவர் இடிந்ததில் தொழிலாளி பலி

Niroshini   / 2021 நவம்பர் 08 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
 

வவுனியா - ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள ஈயத் தொழிற்சாலையில், நேற்று  (07), சுவர் இடிந்து வீழ்ந்து, ஊழியர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தொழிற்சாலையின் இயந்திரப் பகுதிக்குள் ஈயத்தினை உருக்குவதற்காக பயன்படுத்தப்படும் கல் சுவரை உடைத்துக்கொண்டிருந்த போதே, இவ்வனர்த்தம் சம்பவித்துள்ளது.

சம்பவத்தில் மாத்தளை பகுதியை சேர்ந்த வேலு உதயராஜ் (வயது 37) என்ற நபரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X