2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதியின் இணைப்பு அலுவலகம்: சிங்களத்தில் பெயர்ப்பலகை

George   / 2016 நவம்பர் 20 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வட மாகாணத்தில் வவுனியா மாவட்டம் அதிகளவில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுநீரக நோய் தொடர்பான, ஜனாதிபதியின் வன்னிக்கான இணைப்பு அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள அலுவலகத்தை, மத்திய சுகாதார அமைச்சர், ராஜித சேனாரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இதன்போது, பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. வன்னியில் தமிழ் மொழி பேசும் மக்கள் அதிகமாகவுள்ள நிலையில், இவ் இணைப்பு அலுவலகத்தின் பெயர்ப்பலகை தனிச் சிங்களத்தில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வவுனியா அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார, மேலதிக அரச அதிபர் திரேஸ் குமார், கிராம அலுவலர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .