Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, தட்டுவன்கொட்டி கிராமத்திற்கான குடிநீர் விநியோகம் கடந்த ஆறு நாட்களாக மேற்கொள்ளப்படாத நிலையில் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
வருடம் முழுவதும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் பகுதிகளில் ஒன்றாக கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள தட்டுவன்கொட்டிக்கிராமத்தில் தற்போது 94 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதிக்கான குடிநீர் விநியோகம் கரைச்சிப்பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கடந்த 12ஆம் திகதியிலிருந்து இந்தப்பகுதிக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் தாங்கள் குடிநீரை 15 கிலோ மீற்றருக்கு அப்பால் சென்று பெற வேண்டியிருப்பதாகவும் இதனால் ஏராளமான குடும்பங்கள் குடிநீர் இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமக்கான குடிநீரை பெற்றுத்தர உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கரைச்சிப்பிரதேச சபை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது இது தொடர்பில் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
4 hours ago
8 hours ago
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
16 Aug 2025