2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தனிப்பட்ட தகராறில் ஒருவர் கொலை

Freelancer   / 2022 ஜூன் 07 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலம்பில் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு புகுந்த இருவர், அவ்வீட்டிலிருந்தவரை தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டிற்கு நேற்று இரவு வந்தவர்களுக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட  தகராறில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், அலம்பில் தெற்கு, அலம்பில் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .