2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தனிமையில் இருந்த பெண் மர்ம மரணம்

George   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து, பெண்ணொருவரது சடலமொன்று, நேற்று வியாழக்;கிழமை (01) மீட்கப்பட்டுள்ளது.

வட்டக்கச்சி, சில்வா வீதி, ஐயனார் கோயிலடியைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா சந்திரபாரதி (வயது 47) என்ற பெண்ணே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இவரது குடும்பத்தினர், உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், குறித்த பெண் தனிமையில் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையிலேயே, அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டுக்குச் சென்ற  பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .