Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஜூன் 01 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த் , லெம்பர்ட்
கொழும்பைச் சேர்ந்த தாய், மகன் உள்ளிட்ட மூவர் படகு மூலம் தமிழகத்திற்கு சென்று அகதி தஞ்சம் கோரியுள்ளனர்.
கொழும்பைச் சேர்ந்த ஜெசிந்தா மேரி , அவரது 10 வயதுடைய மகன் மற்றும் மன்னார் சிலாவத்துறையை சேர்ந்த அனிஸ்டன் உள்ளிட்ட மூவரே தஞ்சமடைந்துள்ளனர்.
குறித்த மூவரும் மன்னர் பேசாலை கடற்கரையில் இருந்து நேற்றைய தினம் இரவு, படகொன்றில் சென்று இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள கோதண்டராமர் கடற்கரை பகுதியை சென்றடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த மண்டபம் கடலோர காவல் படையினர் மூவரையும் மீட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் இன்றைய தினம் ஜூன் மாதம் 1ஆம் திகதி வரையில் 83 பேர் கடல் மார்க்கமாக தமிழகம் சென்றுள்ளனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
05 May 2025