Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 நவம்பர் 23 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி கல்வி வலயத்தில் பாடசாலைகளில் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் ஆசிரியர்களாகவும் ஐந்து ஆண்டுகள் அதிபர்களாகவும் பணியாற்றுகின்றவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படாமல் இருப்பது பெரும் பாதிப்புகளை உருவாக்கி உள்ளது.
ஒரு பாடசாலையில் ஏழு ஆண்டுகள் ஆசிரியராகவும் ஐந்து ஆண்டுகள் அதிபராகவும் பணியாற்றினால் இடமாற்றங்கள் வழங்கப்படுவது வழமை. 2018இல் வழங்கப்படுகின்ற இடமாற்றங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
ஒரே பாடசாலையில் அதிபர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதன் காரணமாக சேவையில் வளர்ச்சித் தன்மை குறைந்து காணப்படுவதாகவும் புதிய பாடசாலைகளுக்கு அதிபர்களாகவோ ஆசிரியர்களாகவோ பணியாற்றும்போது அதிபர், ஆசிரியர்களிடம் உற்சாகமாக கூடுதலான பணிகளை எதிர்பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் நகரப் பாடசாலைகளில் மேலதிகமான ஆசிரியர்கள் பணியில் இருப்பதாகவும் குறித்த ஆசிரியர்கள் மாவட்டத்தின் கிராமப் புறப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை வலயக் கல்விப் பணிமனை எடுக்க வேண்டும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .