2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘தொழிற்சாலை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Editorial   / 2019 ஏப்ரல் 26 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - ஓமந்தையில் அமைந்துள்ள உருக்கு தொழிற்சாலை தொடர்பாக விசாரணை செய்யப்பட வேண்டுமென, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ஓமந்தையில் அரச வீட்டுத்திட்ட பகுதியில் ஈயம் மற்றும் உருக்கு தொழிற்சாலை இயங்கி வருகின்றது. இதற்குள் எவரும் செல்ல முடியாதவாறு உயரமான சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் மரக்குற்றிகள் மற்றும் வாகனங்களின் பழைய பற்றரிகள் என்பன உள்ளே வைக்கப்பட்டள்ளது.

இந்நிலையில், நேற்று வவுனியா - வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் குறித்த தொழிற்சாலை யாருடையது மற்றும் உள்ளே எவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றது என்பது தொடர்பாக பொலிஸார் ஆராய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளனர்

இந்நிலையில், குறித்த தொழிற்சாலையின் பதிவு விடயங்கள் தொடர்பாகவும் அரச அதிகாரிகளிடம் விடயங்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .